என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாரி செல்வராஜ், மாமன்னன், உதயநிதி ஸ்டாலின், mari selvaraj, maamannan, udhayanidhi stalinபரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாமன்னன்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. சமீபத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தது.
மாமன்னன் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு 'மாமன்னன்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
He's a force to reckon with. Here's wishing the powerful storyteller @mari_selvaraj a very happy birthday from team #MAAMANNAN ? ?
— Red Giant Movies (@RedGiantMovies_) March 7, 2023
#HBDMariSelvaraj@Udhaystalin @RedGiantMovies_ @arrahman @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah pic.twitter.com/iEehfTXaaA
- இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
- இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில், 'ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இபடத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது.
தி.மு.க.வின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மு.க. ஸ்டாலினின் பிரசாரம், கூட்டணி வியூகம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரமும் சிறப்பாக இருந்ததாக மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரமும் அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும், மக்களையும் கவர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரியும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றவருமான டி.ஆர்.பாலு இதை முதன்முதலாக வலியுறுத்தினார். அவரது கருத்தை தி.மு.க.வில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்துள்ளனர். எனினும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி என்பது மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த பதவி ஆகும். 2012-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் இளைஞரணியில் சீரமைப்பைக் கொண்டு வந்தார்.
2017-ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கினார். ஆனால் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. எனவே அவரை மாற்றி விட்டு உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக உதயநிதிக்கு கட்சியின் பதவி வழங்கப்படும் என தி.மு.க. நிர்வாகிகள் கூறினர்.
வேலாயுதம்பாளையம்:
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம், புதுகுறுக்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கா நீங்கள் வாக்களித்தீர்கள்? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? ஜெயலிலதாவுக்குதான் வாக்களித்தீர்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த கூத்துகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களை அடைத்து வைத்தபோது ஒரு எம்.எல்.ஏ. சுவர் ஏறி குதித்தார். இன்னொருவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். எடப்பாடி பழனிச்சாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்தார்.
இந்த ஆட்சி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வருகின்றன. எனவே இந்த ஆட்சி தற்போது டெட்பாடி ஆகி விட்டது. பிணத்தை சவப் பெட்டியில் வைத்து 4 ஆணி அடிப்பார்கள். அது தான் இப்போது நடைபெறும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல். நீங்கள் ஆணி அடித்தால் புதைகுழியில் தள்ளி விடலாம்.
மோடி போட்ட பிச்சை இந்த முதல்-அமைச்சர் நாற்காலி. மோடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி டாடா காட்டி விட்டோம். எடப் பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தீர்கள் என எடப்பாடி பழனிச்சாமியை கேட்டால், 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததே சாதனை. 38 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து சமாளித்துள்ளோம் என்கிறார்.
இதுவெல்லாம் சாதனையல்ல வேதனை. எந்த கட்சியுடன் உதவியும் இல்லாமல் தூத்துக்குடியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் காவல் துறையை வைத்து 13 பேரை காக்கா, குருவியை போல சுட்டு கொன்றனர். 1,000 பேர் கூடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். எனவே இந்த ஆட்சி தேவையா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
மக்களின் எழுச்சியை பார்க்கையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. எனவே ஜூன் 3-ந்தேதி தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தின் போது, நமது தலைவர் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இறந்தது எப்படி? என்பது குறித்து கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் பன்னீர்செல்வம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறியதோடு அவர் நின்று விட்டார்.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை தீட்டுவது ஒருபுறமிருப்பின், முதல் வேலையாக ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதுதான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் பிரசார வாகனத்தில் நின்றபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது 2 வயது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தின் மேல் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.
அந்த குழந்தையை வாங்கி பார்த்த உதயநிதி ஸ்டாலின் என்னம்மா இன்னுமா இந்த குழந்தைக்கு பெயர் வைக்கல? என கேட்டபடியே குழந்தையிடம் உனது பெயர் என்னம்மா? என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை தனது பெயர் ‘சோபிகா’ என கூறியது. குழந்தையின் மழலைக்குரல் உதயநிதி ஸ்டாலின் கையில் வைத்திருந்த ‘மைக்’ மூலம் ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலினும் சிரித்தபடியே குழந்தைக்கு இந்த பெயரே நன்றாக தான் உள்ளது என கூறி தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் சந்தைரோடு, பைபாஸ் சாலை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
மோடி ஆட்சியில் பணம் மதிப்பிழப்பின் போது நாடு முழுவதும் 150 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக 100 நாட்களாக மக்கள் போராடினர். இதில் மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து மோடி ஆயிரம் பேரை காக்க 13 பேரை கொல்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் டி.வி.பார்க்கவில்லை என அலட்சியமாக கூறினார். இவர்களை பழி வாங்க வருகிற 18-ந் தேதி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் மத்தியில் ராகுல்காந்தி பிரதமாகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பதவி வகிப்பார்கள்.
தி.மு.க. பதவி ஏற்றவுடன் விவசாய கடன், கல்விக்கடன், நகைக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்தார். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்.
திரைப்படத்தில்தான் வில்லன், காமெடியன்கள் இருப்பார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லனாக உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். அதே போல் அனைத்து தமிழக அமைச்சர்களும் காமெடியன்களாக உள்ளனர். மாம்பழம் அழுகிப் போய் விட்டது. அதனால்தான் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்து விட்டு தற்போது மீண்டும் அவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #UdhayanidhiStalin
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். குடும்பம், குடும்பமாக, அலை அலையாக வந்து ஆதரவு தெரிவித்து விட்டு செல்கிறார்கள். தி.மு.க.வினர் ஆதரவு தருவது மட்டும் இன்றி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பல இடங்களில் அவர்களது பிரசார வாகனங்கள் நம்மை கடந்து சென்றபோது வாகனங்களை நிறுத்திவிட்டு வந்து, நீங்க ஜெயிச்சிட்டீங்க போங்க என கூறி கைக்குலுக்கி விட்டு செல்கிறார்கள்.
நான் அவர்களிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் மோடியின் பருப்பு தமிழ் நாட்டில் வேகாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழி இல்லை. 2 அடிமைகளிடம் சிக்கி நாங்கள் தவிக்கிறோம். அந்த அம்மா இருந்தவரை கொஞ்சமாவது மரியாதை இருந்தது. அவங்க மறைந்த பின்னர் கொஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறோம் என்றார்கள்.
ஏப்ரல் 18... மோடியை வீட்டுக்கு அனுப்பபோவது இல்லை. ராகுல் காந்தியை பிரதமராக உட்கார வைக்கப்போகிறது. அதோடு தமிழகத்தில் மோடியின் அடிமைகள் 2 பேரையும் வீட்டுக்கு அனுப்ப போகிறோம்.
எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர். இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு கருணாநிதி மரணத்தின் போது அவர் நடந்து கொண்ட விதம் தான். நமது தலைவர் அவரது கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதற்கு 6 அடி இடம் தர மறுத்து விட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விடிய, விடிய விவாதம் நடந்தது. நீதி வென்றது. மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வந்தது. இறந்த பின்னரும் போராட்டம் நடத்தி வென்றவர் கருணாநிதி.
கொஞ்சம் கூட இரக்கம் இன்றி கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கொடுக்க மறுத்த ஆட்சியை தூக்கிப் போட்டு மிதிக்கும் நேரம் வந்து விட்டது. ஏப்ரல் 18 அன்று நீங்கள் அளிக்கும் வாக்கு தி.மு.க. கூட்டணியை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும்.
அதேபோல் 18 தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். மே 19-ந்தேதி நடைபெற உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற செய்யவேண்டும். மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை.
ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள். அன்று நமது தலைவரை (ஸ்டாலின்) தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்து இருக்கிறது. அதனை தவற விட்டு விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin
புளியங்குடி:
புளியங்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகே பேசியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் தமிழகத்திற்கு செய்த துரோகம் எண்ணிலடங்காதவை. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு, கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காதது என பல்வேறு துரோகங்களை தமிழக மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் செய்துள்ளது.
இதன் எதிரொலியாக தற்போது இந்தியா முழுவதும் மோடியின் எதிர்ப்பலையும், தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையின்படி வெற்றி பெற்ற பின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ், அதற்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே உங்களுக்கு சேவை செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #udhayanidhi #mkstalin #congress
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி 4ரோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது கூடிய கூட்டம் பிரசாரம் கூட்டம் போல் தெரியவில்லை. ஒரு மாநாட்டிற்கு வந்த கூட்டம் அலைகடலென திரண்டிருந்தனர்.
இதுபோன்று நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மோடிக்கு எதிர்ப்பு அலை இருப்பதாகவும், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அலை இருப்பதாகவும் கருதுகிறேன்.
மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சியாக திகழ்கிறது. கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி 5 வருடம் ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வருகின்ற சூழ்நிலையில் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் கூட பணம் போடவில்லை. அதற்கு பதிலாக நாமத்தைதான் போட்டுள்ளார்.
புதிய இந்தியாவை கொண்டு வருகிறேன் என்று கூறி இரவில் அவர் மட்டும் முழித்து இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று அறிவித்து இருந்தார்.
இதன் பலனாக பாமர ஏழை மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்திருந்ததுதான் மிச்சம். இப்படி காத்திருந்த ஏழை மக்களில் 150 பேர் இறந்துள்ளனர்.
ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று மோடி அறிவித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டு வந்து 10 கோடி பேருக்கு வேலையிழக்க செய்தார். இதனை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்து வருகிற 18-ந் தேதி அன்று மோடியை கெட்டுஅவுட் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய 2 பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சையாகும். அவர்கள் இந்த பதவியை பயன்படுத்திக் கொண்டு ஒக்கி, கஜா போன்ற புயலில் பாதிப்படைத்த மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கவில்லை.
மேலும், ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது கூடிய மக்களை கலைப்பதற்காக 13 பேரை சுட்டு கொன்றது இந்த ஆட்சி. ஆனால், இதுவரை மோடியோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
வெளிநாடுகளில் சுற்றி திரிந்த மோடி இந்த 5 வருடங்களில் பிரச்சினை காலங்களில் தமிழகத்திற்கு ஒரு தடவைக் கூட வரவில்லை. ஆனால் தேர்தல் வந்ததும், 3 முறை மோடி வந்து சென்றுள்ளார்.
கடந்த மாதம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓ.பி.எஸ். என்றும், முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்றும் கூறியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், அவர்கள் தற்போது மோசடி கூட்டணியுடன் சேர்ந்து உள்ளனர்.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அவர் சென்ற தேர்தலின்போது கூறி வந்தார். தற்போது பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று தெரிகிறது.
இதேபோன்று பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. சராசரியாக தொகுதி வாரியாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கு வெறும் 12 கேள்விகளை மட்டுமே எழுப்பி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தர்மபுரி பாராளுமன்ற பிரச்சினை குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தெரிகிறது.
ராமதாசுக்கு இந்த கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை. ஆனால் அன்புமணியின் கட்டாயத்தினாலோ அல்லது பணம் வாங்கியதலோ இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலின்போது நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன் என்று கூறினார். ஆனால் அவர் இங்கு ஒரு நாள் கூட தங்கவில்லை.
மேலும், அவர் இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார் ஆனால் இங்கு ஒரு தொழில் நிறுவனம் கூட அமையவில்லை.
ஆகவே, தி.மு.க. சார்பில் எனது தாத்தா கலைஞர் வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குபடி செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு, கல்வி கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ரெயில், பஸ்பாஸ் வழங்கப்படும். டி.வி. கேபிள் கட்டணம் குறைப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்துவோம். அண்ணன் ராகுல்காந்தி 25 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். ஆனால், ஊழல் ஆட்சியை சேர்த்தவர்கள் இவற்றை தரமுடியாது என்று கூறி வருகின்றனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஏனென்றால் இதனை கூறியது மோடி அல்ல, ராகுல் காந்தி. சொன்னது சொன்னபடி நடைபெறும். 100 நாள் வேலை திட்டத்தை தற்போது உள்ள ஆட்சி 40 நாட்களாக குறைத்துள்ளது. மீண்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதாவின மறைவு குறத்து இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, நீட் தேர்வில் அனிதா இறப்பு என பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.
இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் உரிய அனுமதியின்றி பிரசாரம் செய்யததாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சங்கராபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #DMK #UdhayanidhiStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்